அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில் - 625301, மதுரை .
Arulmigu Kallalagar Temple, Alagarkovil - 625301, Madurai District [TM032123]
×
Temple History
தல பெருமை
தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவத் திருப்பதிகளில் ஒன்று அழகர்கோயில் ஆகும், நிலக்குறுங்கோட்டில் 10.5 பாகையிலும், நிலநெடுங்கோட்டில் 78.14 பாகையிலும் அமைந்துள்ள அழகர்கோயில், மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும், மதுரையிலிருந்து வடக்கு- வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி...தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவத் திருப்பதிகளில் ஒன்று அழகர்கோயில் ஆகும், நிலக்குறுங்கோட்டில் 10.5 பாகையிலும், நிலநெடுங்கோட்டில் 78.14 பாகையிலும் அமைந்துள்ள அழகர்கோயில், மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும், மதுரையிலிருந்து வடக்கு- வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி ஆகிய மூன்று சிற்றூர்களும் இணைக்கப்பெற்று, அழகர்கோயில் ஊராட்சி எனப்பெயரிடப்பட்டுள்ளது, இரணியமுட்டநாடு என்பது பாண்டி மண்டலத்திலிருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பதும், அந்நாடு மதுரை மாநகர்க்கு வடகிழேக்கேயுள்ள ஆனைமலை, அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை) முதலான ஊர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநிலப்பரப்பு என்பதும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன என்பர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், அழகர்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டும், கீழீரணிய முட்டத்துத் திருமாலிருஞ்சோலை எனக் குறிப்பதால், இந்நிலப்பகுதி அக்காலத்தே, கீழீரணியமுட்டநாடு என வழங்கப்பட்ட செய்தியை அறியலாம்.
கோட்டைப்பகுதிகள் :: இந்நிலப்பகுதியில் தென் கிழக்கிலிருந்து வடகிழக்குத்திசை நோக்கிச் செல்லும் ஒரு மலையும், கிழக்கேயிருந்து வரும் ஒரு மலையும் சந்திக்கின்ற இடத்தில் தென்திசையில் மலைச்சரிவில் கிழக்குத் திசையினை நோக்கியதாக அழகர்கோயில் எனப்படும் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு மேற்கிலும் வடக்கிலும் மலைப்பகுதிகள் உள்ளன. கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியன்கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக்கோட்டை எனவும் வழங்கப்படுகின்றன, நாட்டுபுறப் பாடல்கள் உட்கோட்டையினை, நளமகாராஜன் கோட்டை என்று குறிப்பிடுகின்றன, இரு கோட்டைகளும் ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. வட பக்கத்திலுள்ள உட்கோட்டையினை விடத் தென்புறத்திலுள்ள வெளிக்கோட்டை ஏறத்தாழ நான்கு மடங்குபெரிதாக உள்ளது. மதுரையிலிருந்து வடக்குநோக்கி வரும் சாலையும் மேலூரிலிருந்து மேற்குநோக்கி வரும் சாலையும் வெளிக்கோட்டையின் தெற்கு வாசலில் சந்திக்கின்றன.
மதில் சூழ் சோலைமலை என இத்தலத்தினைப் பெரியாழ்வார்பாடுவாதால், அவர் காலத்திலேயே இக்கோயிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது, அழகர்கோயில் வெளிக்கோட்டை பதினான்காம் நூற்றாண்டில் வாணாதிராயர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என இரா. நாகசாமி கருதுவர். எனவே பெரியாழ்வார் குறிப்பிடும் மதில் இரணியன் கோட்டை எனப்படும் உட்கோட்டை மதிலாக இருக்கலாம்.
வெளிக்கோட்டைப்பகுதி :: வெளிக்கோட்டையின் தெற்குவாசல் வழியாகக் கோட்டைக்குள் செல்ல வேண்டும். இவ்வாசலிலிருந்து நேர்வடக்காக உட்கோட்டையினை நோக்கி ஒரு சாலை செல்கிறது. சாலையின் இரு பக்கங்களிலும் வெளிக் கோட்டைப் பகுதியில் மரங்களே நிறைந்துள்ளன. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களால் சாமந்த நாராயணச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயருடைய ஒர் அக்ரஹாரம் இங்கு இருந்தது எனவும், பிள்ளைப்பல்லவராயன் என்பான் அதனை அமைத்துக் கொடுத்தான் எனவும் தெரிகின்றது. இப்போது அந்த அக்ரஹாரம் இல்லை. இப்போது இக்கோயிலின் பிராமணப் பணியாளர் மதுரையில் தல்லாகுளத்தில் குடியிருக்கின்றனர். திருவிழாக்காலங்களில் மட்டும் நாற்பதாண்டுகட்கு முன்னர்கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்டு தமக்கு ஒதுக்கப்படுள்ள வீடுகளில் தங்குகின்றனர், இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியற் படையெடுப்புக்கள் காரணமாக வெளிக்கோட்டையில் குடியிருந்த பிராமணர்கள் தல்லாகுளம் பகுதிக்கு குடியேறியிருக்கவேண்டும் வெளிக்கோட்டையின் வடபகுதியில் இப்போது கோயில் அலுவலகப் பணியாளர் குடியிருப்பும், அடியவர் தங்கும் விடுதியும் உள்ளன.
சாலையின் மேற்புறத்தில் அலுவலகப் பணியளார் குடியிருப்பினை அடுத்துச் சிதைந்த நிலையில் ஒரு மண்டபம் காணப்படுகிறது இம்மண்டபத்தின் ஒரு தூணில் திருமலை நாயக்கரின் சிலை உள்ளது, ஆகவே இம் மண்டபம் அவரால் கட்டப்பட்டிருக்கலாம் எனத்தோன்றுகிறது.
சாலையின் கீழ்ப்புறத்தில் தேர்மண்டபம் உள்ளது. இக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டால், அமைந்த நாராயணன் என்பது இக்கோயில் தேரின் பெயர் என்பதும், தேரோடும் வீதிகளில் ஒன்றின் பெயர் தியாகஞ் சிறியான் திருவீதி என்பதும் தெரிகின்றது. ஆடிமாதம் பெளர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. கோயிலமைந்த உட்கோட்டைக்கு வடக்கிலும் மேற்கிலும் மலைகள் இருப்பதால் இக்கோயிலின் தேர் கோயிலைச் சுற்றிவர இயலாது. மரங்களடர்ந்த வெளிக்கோட்டையின் நான்கு சுவர்களையும் ஓட்டித் தேர் ஓடுகின்றது.
இலக்கிய பின்புலம்
இலக்கியங்களில் அழகர்கோயில் :: தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர்கோயில் பழமைச்சார்ந்த ஒரு திருப்பதியாகும். இத்தலத்தினைப் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் விரிவாகக் காணப்படுகின்றன.
சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டப்பெறும் ஒரே ஒரு வைணவத்தலம் இதுவேயாகும். பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் இத்தலத்தினை மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரம் இக்கோயிலமைந்த மலையினைத் திருமால் குன்றம் என வழங்குவதோடு, இக்கோயிலினையும் குறிப்பிடுகின்றது.
ஆழ்வார்களில் ஆறு பேர் இக்கோயிலைப் பற்றி பாடியுள்ளனர். முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும், பெரியாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆண்டாள் ஆகியோரும் மொத்தம் நூற்றி இருபத்து எட்டு (128) பாசுரங்களில்...இலக்கியங்களில் அழகர்கோயில் :: தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர்கோயில் பழமைச்சார்ந்த ஒரு திருப்பதியாகும். இத்தலத்தினைப் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் விரிவாகக் காணப்படுகின்றன.
சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டப்பெறும் ஒரே ஒரு வைணவத்தலம் இதுவேயாகும். பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் இத்தலத்தினை மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரம் இக்கோயிலமைந்த மலையினைத் திருமால் குன்றம் என வழங்குவதோடு, இக்கோயிலினையும் குறிப்பிடுகின்றது.
ஆழ்வார்களில் ஆறு பேர் இக்கோயிலைப் பற்றி பாடியுள்ளனர். முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும், பெரியாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆண்டாள் ஆகியோரும் மொத்தம் நூற்றி இருபத்து எட்டு (128) பாசுரங்களில் இக்கோயிலைப் பாடியுள்ளனர்.
பெரியாழ்வார் மூன்று திருமொழிகளும், ஆண்டாள் ஒரு திருமொழியும், நம்மாழ்வார் நான்கு திருமொழிகளம், திருமங்கையாழ்வார் இரண்டு திருமொழிகளும் இக்கோயிலின் மீது பாடியுள்ளனர். பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்களில் மட்டும் இத்தலத்தினைக் குறிக்கின்றார். பூதத்தாழ்வார் தவிர மற்ற ஐவரும் பிற பாசுரங்களிலும் இத்தலத்தினை மொத்தம் பதினான்கு இடங்களில் குறித்துள்ளனர்.
புராண பின்புலம்
இக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் இக்கோயிலின் தோற்றம் குறித்து அறிவதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. இலக்கியச் சான்றுகளை நோக்குமிடத்து, பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார், இம்மலையில் திருமாலும், பலராமனும் இணைத்து வழிபடப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றார் ஆனால் இத்தலம் குறித்தெழுந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்குப் பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியோ, குறிப்புகளோ காணப்படவில்லை. ஆழ்வார்களின் காலத்தில் இங்குப் பலராம வழிபாடு மறைந்துவிட்டது போலும். எனவே, இளம்பெருவழுதியாரின் பரிபாடல் ஆழ்வார்களின் காலத்திற்கு முற்பட்டது எனக் கொள்ளத்தகும். அப்பாடலில் இக்கோயிலின் தோற்றம் குறித்த செய்து ஏதும் காணப்படவில்லை. தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் அழகர்கோயில் பழமை வாய்ந்த ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் பெயர் சுட்டிச் சொல்லப்பெறும் திருமால் திருப்பதி இதுவாகும். முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வாரும் இக்கோயிலைப்...இக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் இக்கோயிலின் தோற்றம் குறித்து அறிவதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. இலக்கியச் சான்றுகளை நோக்குமிடத்து, பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார், இம்மலையில் திருமாலும், பலராமனும் இணைத்து வழிபடப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றார் ஆனால் இத்தலம் குறித்தெழுந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்குப் பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியோ, குறிப்புகளோ காணப்படவில்லை. ஆழ்வார்களின் காலத்தில் இங்குப் பலராம வழிபாடு மறைந்துவிட்டது போலும். எனவே, இளம்பெருவழுதியாரின் பரிபாடல் ஆழ்வார்களின் காலத்திற்கு முற்பட்டது எனக் கொள்ளத்தகும். அப்பாடலில் இக்கோயிலின் தோற்றம் குறித்த செய்து ஏதும் காணப்படவில்லை. தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் அழகர்கோயில் பழமை வாய்ந்த ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் பெயர் சுட்டிச் சொல்லப்பெறும் திருமால் திருப்பதி இதுவாகும். முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வாரும் இக்கோயிலைப் பாடியுள்ளார். இங்கு கோயில் கொண்ட இறைவன் பெயரை ஒரு கல்வெட்டு திருமாலிருஞ்சோலை ஆழ்வார் என்று குறிப்பிடப்படுகிறது. திருமாலிருஞ்சோலை பரமஸ்வாமி என்ற பெயரைப் பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. கி.பி.1342ல் எழுந்த விஜயநகர மன்னர் காலத்திய ஒரு கல்வெட்டில் கோயில் இறைவன் அழகர் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார். பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் அழகர் என்ற பெயரையே குறிப்பிடுகின்றன.